சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரியும் வாகனங்கள்! பாடசாலையில் தீவிர விசாரணை
மன்னாரில் அண்மைக்காலங்களாக சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் சுற்றித் திரிவதாகவும், சிறுவர்களை இலக்கு வைத்து அவர்களை கடத்தும் நோக்கிலும் சிலர் மன்னார் மாவட்டத்திற்குள் ஊடுருவி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக நேற்று (08.05.2023) துரித விசாரணை முன்னெடுக்கப்பட்டதோடு பொலிஸாரின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மெல் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர் ஒருவரை வாகனம் ஒன்றில் வந்தவர்கள் இனிப்பு பண்டங்களை வழங்கி பலவந்தமாக ஏற்றிச் செல்ல முயற்சி செய்யப்பட்டதாக குறித்த மாணவர் தமது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக குறித்த மாணவன் கல்வி கற்கும் பாடசாலைக்கு சென்று விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் நேற்று காலை குறித்த பாடசாலைக்கு சென்று மாணவனிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,



