ஜனாதிபதியை சந்தித்த மன்னார் கட்டுக்கரை திட்டக் குழுவினர்
நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட கட்டுக்கரை திட்ட முகாமைத்துவ குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பானது நேற்றைய தினம் (18.07.2023) இடம்பெற்றுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறு இடர்கள் தொடர்பாக திட்டக் குழுவினர் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்துள்ளனர்.
குளப்புனரமைப்பு பணிகள்
குறிப்பாக மல்வத்தோயா மற்றும் கட்டுக்கரை குளப்புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டிருப்பது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
இதேவேளை தற்போது வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கான உர கொடுப்பனவு தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது குளபுனரமைப்பு பணிகளை உடனடிய ஆரம்பிப்பதாக ஜனாதிபதி தெரிவித்ததோடு அவர்கள் முன்வைத்த உரத்திற்கான கொடுப்பனவு தொடர்ந்தும் வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக மன்னார் மாவட்ட கட்டுக்கரை திட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஜனாதிபதியுடனான சந்திப்பு பயனுள்ளதாக அமைந்ததாக மன்னார் மாவட்ட கட்டுகரை திட்டக் குழுவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி அணையா விளக்கு போராட்டம் சொல்லும் செய்தி என்ன..! 23 மணி நேரம் முன்

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam
