மன்னாரில் 30 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு (Video)
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு இராஜப்பு ஜோசப் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள பகுதியில் உலகிலேயே மிக விலை உயர்ந்த போதைப் பொருளான கொக்கைன் வகை போதைப் பொருளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 1 கிலோ 12 கிராம் கொக்கைன் வகை போதைப் பொருள் திங்கட்கிழமை(18.09.2023) மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் தாழ்வுபாடு பகுதியை சேர்ந்த 34 வயதான நபர் என்பதுடன் சந்தேக நபரிடம் மன்னார் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சான்றுபொருள் கையளிக்கப்படவுள்ளதுடன் சந்தேக நபரை முன்னிலைப்படுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
கைது நடவடிக்கை
மன்னார் பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் L.Y.A.S சந்திரபாலவின் பணிப்புரைக்கு அமைவாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத் விதானகே ஆலோசணையின் பெயரிலேயே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கைப்பற்றப்பட்ட கொக்கைனின் தற்போதைய சந்தை மதிப்பு 30 மில்லியன் ரூபாவிற்கும் (3 கோடி) அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/8652980d-1b21-4f96-824c-f4d390d3fd6b/23-650a7d6dc0866.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/1baee256-83e2-4903-8b9b-65edadbf4599/23-650a7d6e7825e.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/f59e2ad0-aa22-4464-ad53-85cc3372ef97/23-650a7d6ecd49f.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/1aad2c1f-1213-4bff-adc1-5dd320467047/23-650a7d6f2ed57.webp)
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 3 நாட்கள் முன்
![Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம்](https://cdn.ibcstack.com/article/02ee5493-9381-4fdd-b64e-c26738dfd53f/25-67ab37febacef-sm.webp)
Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம் Manithan
![நடிகர் கார்த்தியின் மகன் கந்தனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே?.. எங்கே சென்றுள்ளார் பாருங்க](https://cdn.ibcstack.com/article/b6b960dd-630d-4e70-b0a7-f029c87b0e63/25-67ab21be2ee71-sm.webp)
நடிகர் கார்த்தியின் மகன் கந்தனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே?.. எங்கே சென்றுள்ளார் பாருங்க Cineulagam
![விமான விபத்துக்கள் இனி அதிகமாக நடக்கும்... புதிய அச்சுறுத்தல்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்](https://cdn.ibcstack.com/article/58329b6f-0e4a-4e90-8a1c-58cd7101f47a/25-67ab8d212a103-sm.webp)