இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவில் வழங்கப்பட்டுள்ள உதவி திட்டம்
இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்களுக்காக மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்டுள்ள வீடுகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
இந்த நிகழ்வு காணொலி காட்சி மூலம் நேற்றுமுன்தினம் (18.09.2023) இடம்பெற்றுள்ளது.
தமிழகம் முழுவதும் 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.79.70 கோடி (இந்திய ரூபாய்) செலவில் கட்டப்பட்டுள்ள 1,591 வீடுகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
வீடுகளை பார்வையிட்ட முதலமைச்சர்
இதனைத் தொடர்ந்து சின்னார் அணை இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை அவர் பார்வையிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் தீபனாவிஸ்வேஷ்வரி, தாசில்தார்கள் ராஜா, உதவி திட்ட அலுவலர் தமிழரசன், சின்னாறு அணை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தலைவர் ராமசந்திரன் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் கலந்து கொண்டனர்.