கிராம அலுவலகர் கொலை தொடர்பான சந்தேகநபருக்கு பிணை

Covid-19 Mannar Court
By Ashik Jun 22, 2021 04:20 PM GMT
Report

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராகவும், இலுப்பைக்கடவை கிராம உத்தியோகஸ்தராகவும் கடமையாற்றிய எஸ்.விஜியேந்திரன் என்பவரின் கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்றையதினம்(22) மன்னார் மேல் நீதி மன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சட்டத்தரணி எஸ்.டினேஸன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகபிரிவின் கடந்த வருடம் டிசம்பர் மாதம் கடுமையாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட கிராம அலுவலகரின் கொலை தொடர்பாகச் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நபர் இன்று(22) மன்னார் மேல் நீதி மன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலுப்பைக்கடவை கிராம அலுவலகரின் கொலையுடன் தொடர்புபட்டதாகச் சந்தேகிக்கப்படும் குறித்த நபர் கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த வழக்கு மன்னார் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது குறித்த சந்தேக நபர் குறித்து மன்னார் மேல் நீதிமன்றத்தில் சட்டத்தரணி ஊடாக பிணை விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த பிணை விண்ணப்பத்தின் கட்டளை வழங்கப்பட்டதாகச் சட்டத்தரணி எஸ்.டினேஸன் தெரிவித்துள்ளார்.

குறித்த கட்டளையின் அடிப்படையில் சந்தேக நபர் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை விதி விளக்கான காரணமாகக் கொண்டும், நாட்டில் அதி வேகமாகப் பரவி வருகின்ற கோவிட் தொற்றை தனது மேலான கருத்தில் கொண்டும் குறித்த சந்தேக நபரினை 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான றொக்கப் பிணையிலும், இரண்டு சரீர பிணையிலும் செல்லவும், இருவரில் ஒருவர் மனு தாரராகவும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், மாதத்தில் இரு ஞாயிற்றுக்கிழமைகளில் இலுப்பைகடவை பொலிஸ் நிலையத்தில் காலை 9 மணி முதல் 12 மணி வரையுமான நேரத்தில் கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் செல்ல குறித்த சந்தேக நபர் மன்னார் மேல் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு விசாரணையுடன் தொடர்புடைய குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் குறித்த சந்தேக நபர் தொடர்பாக எவ்வித ஆதாரங்களையும் மன்றில் முன் வைக்கவில்லை.

இதனால் ஆதாரங்கள் எவையும் நிரூபிக்க முடியாத நிலையில் சட்டத்தரணிகளினால் மன்றில் சுட்டிக் காட்டப்பட்ட நிலையில்,குறித்த சந்தேக நபர் நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார் என சட்டத்தரணி எஸ்.டினேஸன் மேலும் தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGallery
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US