பரிதவிப்பின் மத்தியிலேயே பணியாற்றி வருகிறோம்: மன்னார் பொது வைத்தியசாலை தரப்பு ஆதங்கம்
கடினமான சூழ்நிலைகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய எமது மருத்துவ சமூகத்தினர் இன்று சுமுகமாக பணியாற்ற முடியாத நிலையில் பரிதவித்து வருவதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மன்னார் மருத்துவமனை பொருட்களைச் சேதப்படுத்தியவர்கள் அடையாளம் கண்டு கைது செய்து அவர்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குறித்த சங்கம் விடுத்துள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அரச மருத்துவ அதிகாரிகள்
“மன்னார் மாவட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் மற்றும் ஏனைய கூட்டு அமைப்பினரும் இணைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எதிராக நடந்துவரும் தற்போதைய முரண் நிலைகள் தொடர்பாக ஆராய்ந்து உள்ளோம்.
இதற்கமைய மன்னார் மருத்துவமனை சமூகத்தினருக்கு எதிரான சமூக ஊடகங்களில் தேவையற்ற அவதூறான, இழிவான பதிவுகள் மற்றும் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மருத்துவமனை வட்டாரத்தினராகிய நாம் உளரீதியாக பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளோம்.
இதற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
அத்துடன் மன்னார் மக்களுக்கு சேவையாற்ற உறுதியான, பொறுப்பான, பொறிமுறை அமைப்பாக இயங்கி இச் சிக்கல்களை சரி செய்வதற்கு நாங்கள் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








பிரித்தானியாவில் மாணவர்களின் தலைகளை கழிப்பறையில் திணித்து: வெளிச்சத்திற்கு வந்த கொடூரம் News Lankasri

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan
