மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் குதிப்பு
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற தாதிய உத்தியோகத்தர்கள் இன்று காலை முதல் இரண்டு நாட்கள் சுகயீன விடுமுறையில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தாதிய உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்த போதும், அவர்களின் பிரச்சினைகளுக்கு இது வரை எவ்வித தீர்வும் பெற்றுக் கொடுக்கப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற தாதிய உத்தியோகத்தர்கள் இன்று காலை முதல் 2 நாள் சுகயீன விடுமுறை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
அகில இலங்கை தாதியர் சங்கம் உள்ளிட்ட மூன்று சங்கங்கள் இணைந்து குறித்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
இன்றையதினம் காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற தாதியர்கள் கடமைக்குச் செல்லவில்லை.
தாதியர்களின் சுகயீன விடுமுறை போராட்டம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பல இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
தாதிய உத்தியோகத்தர்கள் முன் வைக்கின்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது விட்டால் தமது போராட்டம் தொடரும் என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் எச்சரித்துள்ளனர்.











Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam
