உள்நாட்டு கடற்றொழிலாளர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
உள்நாட்டு கடற்றொழிலாளர்களையும் உள்நாட்டு வளங்களையும் பாதுகாக்க ஜனாதிபதி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட கடற்றொழில் கூட்டுறவு சங்கத்தின் செயலாளரும், வடமாகாண கடற்றொழில் இணையத்தின் ஊடகப் பேச்சாளருமான என்.எம். ஆலம் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்று(18.01.2024) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அத்து மீறிய வருகை
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகை கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
எனினும் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகையை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்திய கடற்றொழிலாளர்களின் வருகையை கட்டுப்படுத்த ஏன் அரசாங்கம் தவறவிடுகின்றது என்ற கேள்வி மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கண்துடைப்புக்காக பாதிக்கப்பட்ட எமது கடற்றொழிலாளர்கள் முறைப்பாட்டை வைக்கின்ற போது ஒரு சில படகுகளை கைது செய்கின்றனர்.
எனினும் தொடர்ச்சியாக இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகையும்,ஏனைய செயற்பாடுகளினால் வட பகுதி கடற்றொழிலாளர்கள் தொழில் இழப்பை சந்திப்பதோடு, கடற்றொழில் உடமைகளையும் இழந்து வருகின்றனர். இலங்கை அரசும் இதனை கண்டுகொள்ளாமல் இருக்கின்றது.
வழங்கப்பட்ட வாக்குறுதி
குறுகிய எல்லைப்பரப்பை பாதுகாக்க முடியாமல் இருக்கின்ற இந்த அரசாங்கம் வெறுமனே எங்களுக்கு அப்பால் இருக்கின்ற கடல் பிரதேசத்தையும், கடல் வணிக நடவடிக்கைகளையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
தொடர்பே இல்லாத நாடுகளுக்கு திட்டங்களையும், நிதியுதவிகளையும் வழங்க வாக்குறுதி வழங்கியுள்ளனர்.
இருப்பினும் அழிக்கப்பட்ட வடமாகாணம் எவ்வித நிதி வசதியும் இல்லாமல், அங்குள்ள பாடசாலைகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் எவ்வித தொழில் நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாத நிலையில் சம்மந்தமே இல்லாத நாடுகளுக்கு உதவிகளை மேற்கொள்ள ஜனாதிபதி நடவடிக்கைகளை மேற்கொள்வதை ஒரு வகையில் நாங்கள் பாராட்டினாலும்,எமது பிரச்சினைகளை தீர்த்து வைத்ததன் பின்னர் அதனை அவர் முன்னெடுக்க வேண்டும்.
இந்திய கடற்றொழிலாளர்களின் வருகையினால் எமது கடற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கு இதுவரை இழப்பீடுகள் வழங்காத நிலையில் கடற்றொழிலாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகி்னறனர்.
இந்நிலையில், உள்நாட்டு கடற்றொழிலாளர்களையும், உள்நாட்டு வளங்களையும் பாதுகாக்க ஜனாதிபதி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
you may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 18 மணி நேரம் முன்

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
