மன்னார் கரைவலை கடற்றொழிலாளர்களுக்கு புதிய சிக்கல்
மன்னார் மாவட்டத்தில் கரைவலை மீன்பிடி எல்லைகள் அளக்கப்பட்டு கரைவலை மீன்பிடி தொழிலில் ஈடுபடும் அனைத்து கடற்றொழிலாளர்களுக்கும் வழங்கப்படவேண்டும் என மன்னார் மாவட்ட கடற்றொழில் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று(04.08.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாட்டத்தில் மீன்பிடி எல்லைகள் அளக்கப்படுவது தொடர்பாகவும் குறித்த எல்லைகள் குறிப்பிட்ட சிலருக்கு வழங்கப்பட உள்ளதாகவும் கடற்றொழில் கூட்டுறவு சங்கத்திற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
குறிப்பாக இந்த எல்லைகள் அளந்து வழங்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் கடந்த காலங்களில் வலியுறுத்தி வந்ததன் நிமித்தம் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக நாங்கள் அறிகிறோம்.
எனினும் குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் எல்லைகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கடற்றொழில் திணைக்களமும் பிரதேச செயலாளரும் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



