மன்னார் மாவட்ட தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் மாவட்டக் கிளைக்கான புதிய நிர்வாகத் தெரிவு மன்னார் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
குறித்த கூட்டமானது இன்றைய தினம் (02.09.2023), கட்சியின் நிர்வாக செயலாளர் சூசைப்பிள்ளை சேவியர் குலநாயகம் தலைமையில் நடைபெற்றது.
புதிய நிர்வாகத் தெரிவு
மன்னார் மாவட்டத்தின் ஐந்து பிரதேசக் கிளைகளினதும் நிருவாகிகளின் பங்களிப்போடு குறித்த கூட்டம் நடைபெற்றதுடன், உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
இதன்போது, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, மன்னார் மாவட்டக் கிளையின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், செயலாளராக சூசையப்பு துரம், பொருளாளராக முன்னாள் நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் பரஞ்சோதி, துணைத்தலைவராக ஜெயக்குமார், துணைச் செயலாளராக செல்வராணி சோசை ஆகியோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
அதேவேளை, மாவட்டக் கிளையின் செயற்குழு உறுப்பினர்களாக 10 பெரும் தெரிவு செய்யப்பட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




