மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம்
மன்னாரில் இந்த வருடத்திற்கான இறுதி அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் .கனகேஸ்வரன் நெறிப்படுத்தலின் கீழ் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தலைமையில் இன்றைய தினம் (4) காலை மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த கூட்டம் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,ரிஷாட் பதியுதீன்,காதர் மஸ்தான்,ஜெகதீஸ்வரன்,துரைராஜா ரவிகரன்,முத்து முகமது , வடமாகாண பிரதம செயலாளர் எம்.தனுஜா ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம் பெற்றது.
கலந்துரையாடல்
குறித்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மாவட்ட அபிவிருத்தி சார்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக போக்குவரத்து,வீதி புனரமைப்பு,சுகாதாரம்,குடிநீர் உள்ளடங்களாக பல்வேறு விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் வன வள திணைக்களத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கூட்டத்தில் கலந்துரையாட பட்டதோடு,குறித்த திணைக்களத்திற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டது.
குறித்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள், நகர சபை, மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள், உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், முப்படை பிரதானிகள், அரச பதவி நிலை உத்தியோகத்தர்கள் , என பலரும் கலந்து கொண்டனர்.



ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan