மன்னார் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் 26 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
மன்னார் மாவட்டத்தில் இம்மாதத்தின் 10 நாட்களுக்குள் 26 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை 533 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களுக்கு இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போது மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
மன்னார் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் 26 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
காணப்பட்டுள்ளனர்.
தற்போது வரை 533 கோவிட் தொற்றாளர்களும், இந்த வருடம் 516 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் சமூகத்தில் மேற்கொள்ளப்பட்ட 187 பி.சி.ஆர் பரிசோதனைகளுக்காக அனுப்பி
வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பரிசோதனை முடிவுகள் எதிர்பார்க்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam