மன்னார் மாவட்டத்தில் 4 நாட்களில் 156 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்! (Photos)
மன்னார் மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வரும் நிலையில் கடந்த 4 நாட்களில் மாவட்டத்தில் 156 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் இன்று சனிக்கிழமை (5) விடுத்துள்ள கோவிட் நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் (4) வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனையின் போது மேலும் புதிதாக 24 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த 4 நாட்களில் 156 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வருடம் 357 கோவிட் தொற்றாளர்களும் மாவட்டத்தில் தற்போது வரை 3540 கோவிட் தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் மன்னார் மாவட்டத்தில் இதுவரை 36 கோவிட் மரணங்கள் நிகழ்ந்துள்ளது எனவும் குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri