மன்னார் நகர சபை சுத்திகரிப்பு பணியாளர்கள் போராட்டம்(Video)
மன்னார் நகர சபையின் சுத்திகரிப்பு பணியாளர்கள் மற்றும் சாரதிகள் இணைந்து இன்று(4) காலை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
மன்னார் நகர பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த கழிவு அகற்றும் நடவடிக்கைகள் கடந்த சில தினங்களாக தடைப்பட்டுள்ளது.
போராட்டம்
உரிய முறையில் எரிபொருள் வழங்கப்படாமையால் கழிவு அகற்றும் நடவடிக்கையை முன்னெடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக மன்னார் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சுத்திகரிப்பு பணிக்கு, வாகனங்களுக்கு தேவையான எரிபொருட்கள் உரிய முறையில் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் மன்னார் நகர சபையின் சுத்திகரிப்பு பணிக்கு தேவையான எரிபொருளை வழங்ககோரி இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.
கோரிக்கை
“உள்ளூராட்சி மன்றங்களின் சுகாதார சேவைகளை தரம் தாழ்த்தி பார்ப்பது ஏன்?, பெட்ரோல் பங்கீட்டில் உள்ளூராட்சி சேவைகள் புறக்கணிக்கப்படுவது ஏன்?, தின்ம கழிவகற்றல் சேவை அத்தியாவசிய சேவை என்று தெரியாதா அரச அதிபரே?”என பல்வேறு வாசகங்கள் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை
மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்
அங்கிருந்து சென்றுள்ளனர்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
