அதானியிடமிருந்து கைநழுவும் மன்னார் மின் திட்டம்: சபையில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்கான ஒப்பந்தம் குறித்து இந்திய நிறுவனமான அதானி குழுமம் ஆர்வம் காட்டவில்லை என்றால் வேறு நிறுவனத்திற்கு இத்திட்டம் கையளிக்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (14.03.2025) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி இதனை அறிவித்துள்ளார்.
திட்டத்திற்கான ஒப்பந்தம்
அவர், "அதானியின் உள்ளூர் முகவரிடமிருந்து இறுதி பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
அதானி அதிலிருந்து விலக முடிவு செய்தால், திட்டத்திற்கான ஒப்பந்தம் வேறொரு நிறுவனத்திற்கு வழங்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா எழுப்பிய வினாவிற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
