மன்னாரில் விபத்து : ஒருவர் பலி - மூவர் படுகாயம்
மன்னார் - பள்ளமடு பெரியமடு பிரதான வீதியில் இன்று(22) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
பெரிய மடு பிரதான வீதியூடாக பயணித்த டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதன் காரணமாக இந்த விபத்து சம்பவித்துள்ளது.
சம்பவ இடத்திலேயே மரணம்
குறித்த டிப்பர் வாகனத்தில் 4 நபர்கள் பயணித்துள்ளதாகவும், விபத்தின்போது ஈச்சளவக்கை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, சாரதி உள்ளடங்களாக மூவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த மூவரும் உடனடியாக மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







தமிழ்த் தலைவர்கள் ஒருபோதும் முடிவடையாத பேச்சுவார்த்தையின் எஜமானர்கள் 23 மணி நேரம் முன்

Fire பட வெற்றிக்கு பிறகு புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ரச்சிதா... எந்த டிவி தொடர், முழு விவரம் Cineulagam

இந்தியன் வங்கியின் IND Super 400 நாட்கள் FD திட்டத்தில் ரூ.4,44,444 முதலீடு செய்தால்.., எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri
