நாட்டையே உலுக்கிய சோகம்! 3 வருடங்களுக்கு முன்னரே எச்சரித்த நபர்
பொலன்னறுவை - கதுருவெல பிரதேசத்தில் இருந்து கல்முனை வரையிலான பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த தனியார் பேருந்தொன்று மன்னம்பிட்டி கொட்டலி பாலத்தில் ஞாயிற்றுக்கிழைமை இரவு 8 மணிக்கு வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாலத்திற்குள் பாய்ந்ததில் இரு பெண்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் படுகாயமடைந்துள்ளதாக மன்னம்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த விபத்து இடம்பெறுவதற்கு 3 வருடங்களுக்கு முன்னரே அதாவது 2020 ஆண்டு மார்ச் மாதம் 6ஆம் திகதி குறித்த பேருந்தின் செயற்பாடு குறித்து ஒருவர் அதிருப்தி தெரிவித்து தனது முகப்புத்தக பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவானது தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அப்பதிவில் குறித்த பேருந்தானது பயணிகளின் உயிரைக் கருத்தில் கொள்ளாது மிகவும் வேமாகப் பயணிப்பதாகவும் எதிர் திசையில் வாகனம் வந்தாலும் அவற்றுக்கு இடம்கொடுக்காமல் முந்தி லெ்வதாகவும், எனவே விரைவில் மக்களின் உயிரை அந்த பேருந்து காவுவாங்கப்போகிறது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |