மன்மோகன் சிங்கின் பூதவுடலுக்கு செந்தில் தொண்டமான் அஞ்சலி
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் (Manmohan Singh) பூதவுடலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார்.
மேலும் செந்தில் தொண்டமான் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிடுகையில்,
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மாத்திரமின்றி, இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஒரு தூணாக திகழ்ந்தார்.
அதுமாத்திரமின்றி இலங்கை இந்தியா உறவை வலுப்படுத்த முன்னின்று செயற்பட்டார்.
இலவச வீட்டுத்திட்டம்
குறிப்பாக 2010ஆம் ஆண்டளவில் அவருடைய ஆட்சி காலத்தில் முதல் முறையாக இலங்கைக்கு இந்திய அரசால் இலவச வீட்டுத்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் அக்காலப்பகுதியில் அவருடன் பலமுறை கலந்துரையாடல்களை மேற்கொண்ட போது, அவருடைய பொருளாதார திட்டங்கள் வியப்பளித்தது. அவர் அண்டைய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியிலும் அக்கறை கொண்டவராக செயற்பட்டார்.
அவருடைய ஆட்சியின் போது, இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட வடகிழக்கை சேர்ந்த 46 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகளும், மலையகத்தில் 4 ஆயிரம் தோட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் வீடுகளை வழங்கி இலவச வீட்டுத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
ஆழ்ந்த அனுதாபம்
இவருடைய இழப்பு இந்திய மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்பதோடு, இலங்கை ஒரு மிக முக்கியமான நண்பனை இழந்து இருப்பதாகவும் செந்தில் தொண்டமான் கூறியுள்ளார்.
மேலும் இவருடைய இழப்பால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்ததோடு மல்லிகார்ஜுன கார்கே சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கும் தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
