முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு ஜனாதிபதி அநுரகுமார இரங்கல்

Anura Kumara Dissanayaka Manmohan Singh Sri Lanka India
By Shadhu Shanker Dec 27, 2024 02:39 PM GMT
Report

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின்(Manmohan Singh) மறைவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தனது எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

எனது சார்பிலும், இலங்கை மக்கள் சார்பிலும் இந்தியக் குடியரசுக்கும், மன்மோகன் சிங்கின் குடும்பத்தாருக்கும், தனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அநுரவின் செயல்திட்டங்களை விமர்சித்துள்ள தமிழ் எம்பி

அநுரவின் செயல்திட்டங்களை விமர்சித்துள்ள தமிழ் எம்பி

மன்மோகன் சிங் மறைவு

தொலைநோக்கு கொண்ட தலைவரான மன்மோகன் சிங்கின் வழிகாட்டல் இந்தியாவிற்குள் மாத்திரம் மட்டுப்படவில்லை.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு ஜனாதிபதி அநுரகுமார இரங்கல் | Manmohan Singh Death Anura Kumara Condolences

2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராக அவர் செயல்படுத்திய கல்வி உரிமைச் சட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய கிராமிய வேலைவாய்ப்பு செயல்திட்டம் போன்ற மாற்றத்துக்கான திட்டங்கள் என்பன சமத்துவம், தலையீடு தொடர்பிலான அவரது உறுதியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன.

சர்வதேச ஒத்துழைப்புக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றிய காலாநிதி மன்மோகன் சிங், நீண்டகால கூட்டுறவு கூட்டணிகளை ஆரம்பிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கியதுடன் BRICS போன்ற அமைப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்.

மன்மோகன் சிங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ரணில்

மன்மோகன் சிங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ரணில்

 ஜனாதிபதி இரங்கல்

இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தங்கள் மூலம் அவரது சிறந்த இராஜதந்திரம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு ஜனாதிபதி அநுரகுமார இரங்கல் | Manmohan Singh Death Anura Kumara Condolences

அவரது தன்னடக்கம், அறிவாற்றல் மற்றும் அரச சேவைக்கான அர்ப்பணிப்பு ஆகியன நிச்சயமாக எதிர்கால சந்ததியினருக்கு ஒரு நிலையான முன்மாதிரியாகவும் ஊக்குவிப்பாகவும் அமையும். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்றையதினம்(26) தனது 92ஆவது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.ஏ. சுமந்திரன் அஞ்சலி 

முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் (வயது 92) மறைவுக்கு எமது மனப்பூர்வமான அஞ்சலிகள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு ஜனாதிபதி அநுரகுமார இரங்கல் | Manmohan Singh Death Anura Kumara Condolences

அவர் இந்தியாவின் பிரதமராக இருந்த காலத்தில் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மிகவும் காத்திரமான பங்களிப்பைச் செய்திருந்தார்.

2011 இல் அப்போதைய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான கூட்டறிக்கையில் “13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, அதிலிருந்து கட்டியெழுப்பி அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு முறை ஏற்படுத்தப்படும்” என்ற வாக்குறுதியைப் பெற்றவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

ஊழல் - மோசடிகளில் கொடி கட்டிப்பறந்த கடந்தகால அரசாங்கங்கள் : சிறிநேசன் பகிரங்கம்

ஊழல் - மோசடிகளில் கொடி கட்டிப்பறந்த கடந்தகால அரசாங்கங்கள் : சிறிநேசன் பகிரங்கம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US