மாங்குளம் பொலிஸாரால் வாகனத்துடன் மூவர் கைது (PHOTOS)
மாங்குளம், கிழவன்குளம் பகுதியில் சிலர் தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக நபரொருவர் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து மாங்குளம் பொலிஸாரால் வாகனத்துடன் மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாங்குளம், கிழவன்குளம் பகுதிக்கு ஹயஸ் ரக வான் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றில் நேற்று சென்ற குழுவினர் அங்குள்ள வீடு ஒன்றின் முன்னால் நின்று வீட்டு குடும்பஸ்தரை அழைத்து தமது மதத்திற்கு மாறுமாறு கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது அவர் அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதுடன், குறித்த குடும்பஸ்தருக்கு அங்கு சென்ற சிலர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட நபர் மாங்குளம் பொலிஸார் மற்றும் 119 பொலிஸார் ஆகியோருக்கு செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அங்கு வருகை தந்த ஹயஸ் ரக வாகனத்தையும், அதனுள் வந்த மூவரையும் கைது செய்துள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள மாங்குளம் பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ Cineulagam
இந்தியாவில் 1 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படவில்லை... பலரும் அறிந்திராத தகவல் News Lankasri