தமிழர் தரப்புக்களுக்கு காத்திருக்கும் பாரிய சவால்!
புதிய அரசாங்கத்தால் திணிக்கப்பட போகும் தீர்வுகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட போகும் என்பதனை உணர்ந்து தமிழர் தரப்புக்கள் ஒன்றிணைய வேண்டும் என சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி தேர்தல்
இடதுசாரிகளுக்கு என பண்பியல்வு இருக்கிறது. அவர்கள் தமக்கு ஏற்றவாறு சட்டங்களை மாற்றி தமது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருப்பார்கள்.
இதனை உணர்ந்த கொண்டு தமிழர்தரப்பு ஒற்றுமைப்பட வேண்டும்.
வடக்கையும் கிழக்கையும் பறிகொடுத்து விட்டு, எங்கள் மீது திணிக்கப்பட போகும் தீர்வுகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட போகும் என்பதனை உணர்ந்து கொண்டும், உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தல்களிலும் அவற்றினை தமிழர் தரப்பு பறிக்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
இதனை உணர்ந்து தமிழர் தரப்புக்கள் ஒற்றுமைப்பட வேண்டும். இதனை நாம் அழைப்பாக கூட விடுகின்றோம்.
தமிழ் தலைமைகள்
தேர்தலில் தோற்றுபோனவன் என இதனை பலர் கூறி நகையாடலாம். அவ்வாறில்லாமல் தமிழ் தலைமைகள் ஒன்றுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஆசன மோதல்களை கைவிட்டு தமிழ் தரப்பு ஒன்றிணைய வேண்டும். தேசிய மக்கள் சக்தி வாக்களித்து விட்டார்கள் என தமிழ் வாக்களர்களை மலினப்படுத்த விரும்பவில்லை.
பொதுக்கட்டமைப்பின் உடைவுக்கு, பொது அமைப்புக்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் தான் உடைத்தார்கள்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
