மன்னாரில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கண்டல் தாவர நடுகை
சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மன்னார் கோந்தைபிட்டி பகுதியில் காணப்படும் கரையோரப் பகுதிகளில் கண்டல் தாவரங்கள் மீள் நடுகை செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது, 'கடற்கரையோரங்களை பாதுகாப்போம்' எனும் தொனிப்பொருளில் இன்று ஞாயிற்றுக்கிழமை (09.06.2024) காலை இடம்பெற்றுள்ளது.
மன்னார் கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளரும் வடமாகாண கடற்றொழில் இணையத்தின் ஊடகப் பேச்சாளருமான என்.எம்.ஆலம் தலைமையில் பொது மக்களுடன் இணைந்து இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கண்டல் தாவரங்கள் நாடல்
மேலும், இந்நிகழ்வில், உப்புக்குளம் பள்ளிவாசல் இமாம், மன்னார் பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், கடற்றொழிலாளர்கள், இளைஞர்கள், சிறுவர்கள், மாதர் அபிவிருத்தி ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டு கண்டல் தாவரங்களை நாட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |