யாழில் பல இலட்சத்திற்கு ஏலம் போயுள்ள மாம்பழம்
யாழில் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமொன்றில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவின் மாம்பழம் பல இலட்சங்களில் ஏலம் போயுள்ளது.
யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி சிறிசிவசுப்பிரமணியர் ஆலயத்திலே இந்த ஏலம் இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆலயத்தில் 15 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிற நிலையில் எட்டாம் நாளான நேற்று மாம்பழத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
வெளிநாடுகளிலும் இருந்தும்
இந்த மாம்பழத் திருவிழா நிறைவடைந்த பின்னராக முருகனின் மாம்பழம் ஆலய நிர்வாக சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது.
இதன் போது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்தும் ஆலயத்திற்கு வந்திருந்த அடியவர்கள் குறித்த மாம்பழத்தை வாங்கும் நோக்கில் ஏலத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மாம்பழத்தின் விலையும் உயர்ந்து கொண்டு சென்றது. இவ்வாறு பல இலட்சங்களையும் தாண்டி மாம்பழம் ஏலம் எடுக்கப்பட்டது.
15 நாள் திருவிழா
இதன்போது வெளிநாட்டில் அதாவது பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்திருந்த அடியவர் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் (4 60 000) ரூபாவிற்கு இந்த மாம்பழத்தை ஏலத்தில் எடுத்திருந்தார்.
இதன் போது ஆலய நிர்வாக சபையினரால் ஏனைய சில பொருட்களும் ஏலத்தில் விடப்பட்டிருந்த நிலையில் அதனையும் அடியவர்கள் ஏலத்தில் வாங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த ஆலயத்தின் 15 நாள் திருவிழாவின் தொடராக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்த் திருவிழாவும் திங்கட்கிழமை தீர்த்த திருவிழாவும் மறுநாள் செவ்வாய்க்கிழமை பூங்காவனத் திருவிழாவும் புதன்கிழபை வைரவர் உற்சவமும் இடம்பெற்று திருவிழா நிறைவடைய உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 23 மணி நேரம் முன்

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam

IQ Test: சிறையிலிருந்து தப்பித்தவர் யார்? 5 வினாடிகளில் புதிரைத் தீர்த்து மக்களை காப்பாத்துங்க Manithan

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
