அரிசி தட்டுப்பாடு குறித்து போலியான பீதியை ஏற்படுத்தி விலையை அதிகரிக்க சூழ்ச்சி
அரிசி தட்டுப்பாடு என போலியான பீதியை ஏற்படுத்தி அரிசி விலையை அதிகரிக்க சூழ்ச்சி செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆறு மாத காலத்திற்கு போதுமான அரிசி
எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சாத்தியமில்லை என விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த பெரும்போகம் மற்றும் சிறு போக நெல் உற்பத்தியானது எதிர்வரும் ஆறு மாத காலத்திற்கு போதுமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை சிறு போகத்தில் 465,000 ஹெக்டயரில் நெல் பயிரிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே 90 வீதமான பயிரிடும் பணிகள் பூர்த்தியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெரும்போகத்தின் 2022-23ம் ஆண்டுக்கான பெரும்போக விளைச்சல் மார்ச் மாத இறுதி வாரமளவில் கிடைக்கப் பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரிசி இறக்குமதி
எதிர்வரும் ஆண்டு முதல் இரண்டு மாதங்களில் நெல் இறக்குமதி செய்ய நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூடுதல் அளவில் நெல் மற்றும் அரிசியை களஞ்சியப்படுத்தி வைத்திருப்பதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தடுக்க அவற்றை சந்தைக்கு வெளிவிடுமாறு கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
