மண்டைதீவில் திருட்டு : சந்தேகநபர் பொலிஸாரால் கைது
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டைதீவு - 06ஆம் வட்டாரம் பகுதியில் நகைகள், யூரோக்கள் மற்றும் இலங்கை பணம் என்பன களவாடப்பட்டுள்ளன.
இது குறித்து சந்தேகநபர் ஒருவர் ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வரலாற்றில் முதல் முறையாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தமிழ் பெண் எம்.பியுடன் முள்ளிவாய்க்கால் நினைவு கூட்டம்
திருட்டு
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
மட்டக்களப்பை சேர்ந்த குறித்த சந்தேகநபர் சம்பவம் நிகழ்ந்த வீட்டில் தங்கியிருந்து அங்கிருந்த முதியவர் ஒருவரை பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதியவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில் நேற்றையதினம் அந்த வீட்டுக்கு சென்ற சந்தேகநபர் மூன்றரை பவுண் நகைகள், 3 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா காசு மற்றும் 700 பிரான்ஸ் யூரோக்கள் என்பவற்றை திருடிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் ஊர்காவற்துறை பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் அவரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.