சம்பத் மனம்பேரி தொடர்பில் அவசர சந்திப்பில் முக்கிய அரசியல்வாதி
சம்பத் மனம்பேரி தனது ஒருங்கிணைப்புச்செயலாளர் அல்ல என்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
மனம்பேரி என்ற நபர் தனது ஒருங்கிணைப்புச் செயலாளர்களில் ஒருவர் என்று உண்மைக்குபுறம்பான தகவல் வெளியாகி வருவதாகவும், இதுபோன்ற தவறான அறிக்கைகள் மற்றும் அவதூறுகளை வெளியிடும் குழுவிற்கு எதிராக அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தலைமையில் குருநாகலில் இன்று (5) இடம்பெற்ற நிகழ்வில் கட்சி உறுப்பினர்களிடம் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் தயாரிப்பு
“ மனம்பேரி என்ற நபர் எனது ஒருங்கிணைப்புச் செயலாளர்களில் ஒருவர் என்று கூறுகின்றார்கள். நினைவில் கொள்ளுங்கள். நான் இந்த மாவட்டத்திலிருந்து மட்டுமே ஒருங்கிணைப்புச் செயலாளர்களை நியமித்தேன்.” எங்களுக்கு இன்னும் சட்டத்தின் மீது வலுவான நம்பிக்கை உள்ளது. எனவே, சட்டத்தின் கீழ் எல்லா நேரங்களிலும் எங்களால் முடிந்தவரை செயல்படுவோம்” என்று கூறியுள்ளார்.
"ஐஸ்" போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மூலப்பொருட்களை உள்ளடக்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில், முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் சம்பத் மனம்பேரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுக்குச் சொந்தமானது என குறித்த கொள்கலன்கள் அடையாளம் காணப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த பின்னணியில் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 மணி நேரம் முன்

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri
