20 வருடங்களாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை சுற்றிவளைத்து பிடித்த பொலிஸ்
மொனராகலை, மெதிரிய பகுதியில் தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்து சுமார் இருபது வருடங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை மேல் நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு விசாணை விசாரிக்கப்பட்டு, அதில் வன்கொடுமை செய்த தந்தையை மேல் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது.
இதனையடுத்து குறித்த நபருக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட நிலையில் உயர் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டது.
கடுங்காவல் சிறைத்தண்டனை
குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை, ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் மற்றும் அபராதம் செலுத்தப்படாவிட்டால் மேலும் இருபது ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும், சந்தேக நபர் சுமார் 20 வருடங்களாக தலைமறைவாக இருந்தமையினால் குற்றவாளியை பிடிக்க பொலிஸார் சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் குற்றவாளி மதுரட்ட பகுதியில் மறைந்திருந்தபோது கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறப்பு நடவடிக்கையில் மொனராகலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.
36 வயதில் காணாமல் போன் குற்றவாளி 56 வயதில் கைது செய்யப்பட்ட நிலையில், மொனராகலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.