தெஹிவளை அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமாக உயிரிழந்த நபர்
தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் அறையொன்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தொலைபேசி அழைப்பின் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.
40 முதல் 50 வயதுக்கும் வயதிற்குட்பட்ட நபர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் இறந்து 3 நாட்களாகியிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனை
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இது தொடர்பான விசாரணைகளுக்காக கல்கிஸ்ஸ நீதவான் அழைக்கப்பட்டதன் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
