வவுனியாவில் பல லட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது
வவுனியா(Vavuniya) உக்குளாங்குளம் பகுதியில் பல லட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் ரிஸ்வி தலைமையிலான பொலிஸ் பிரிவினர் திடீர் சோதனை நடவடிக்கையினை உக்குளாங்குளம் பகுதியில் முன்னெடுத்திருந்தனர்.
மேலதிக விசாரணைகள்
இதன் போது 50கிராம் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் செட்டிக்குளம் பகுதியினை சேர்ந்த 36வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைப்பற்ற போதைப்பொருளின் பெறுமதி கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபா எனவும் கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்படும் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
விபத்து ஏற்பட்டு ரத்த காயத்துடன் வலியில் துடிக்கும் தமிழ், பதறிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam