போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த முன்னாள் அரச அதிகாரி கைது
அம்பாறையில் (Ampara) நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டின் பேரில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் மருதமுனை நகரை அண்டிய பகுதியில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், அவரின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு பெரிய நீலாவணை பொலிஸார் துரித விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
நீதிமன்றில் முன்னிலை
இதன் போது, 840 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 4540 மில்லி கிராம் கேரளா கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த கணக்காளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தேக நபர் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளராக பணியாற்றிய 39 வயது மதிக்க தக்கவர் என பெரிய நீலாவணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த பெரிய நீலாவணை பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |