ஏடிஎம் அட்டை மோசடி: வசமாக சிக்கிய சந்தேகநபர்
ஏடிஎம் அட்டை மோசடிகள் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேகநபரொருவர் கொழும்பு - மோதர எலி, ஹவுஸ் சாலையில் கைதாகியுள்ளார்.
குறித்த சந்தேகநபர் போதைப்பொருளுடன் நேற்று பிற்பகல் சிக்கியுள்ளார்.
37 வயதுடைய குறித்த சந்தேகநபர் 12.8 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏடிஎம் அட்டை நிதி மோசடி
அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து, வெல்ல வீதி, மஹாபாகே, பிலியந்தலை, யக்கல மற்றும் பம்பலப்பிட்டி பகுதிகளில் பதிவான ஏடிஎம் அட்டை நிதி மோசடி தொடர்பாக அவர் தேடப்படும் நபர் என்பது கண்டறியப்பட்டது.

மேலும் விசாரணைகளில், கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் 7 வழக்குகள் மற்றும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தொடர்பாக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan
ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri