அம்பாறையில் திடீர் சுற்றிவளைப்பு! போதைப்பொருளுடன் மூவர் கைது
அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள அட்டாளைச்சேனையில் 140 கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் 3 வியாபரிகளை நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் பொதிசெய்யும் இயந்திரம் நிறுவை தராசு போன்றவைகளை மீட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
இதன் போது 84 கிராம் 620 மில்லிக்கிராம் மற்றும் 31 கிராம் 50 மில்லிக்கிராம் மற்றும் 24 கிராம் 94 மில்லிக்கிராம் ஆக 140 கிராம் ஜஸ் போதைப் பொருளை 3 பேரிடமிருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 40,36,40 வயதுடைய மூன்று பேரும் நீண்டகாலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதையடுத்து இவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 6 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam
