எரிபொருள் வரிசையில் ஐந்து நாட்கள்! எரிபொருளின்றியே உயிரிழந்த பொதுமகன்!
எரிபொருளுக்காக உயிர்நீத்தவர்
தென்னிலங்கையின் அங்குருவதொட்ட, படகொட பகுதியில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில், வரிசையில் காத்திருந்த 63 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர் குறைந்தபட்சம் ஐந்து நாட்களுக்கு தனது வாகனத்திற்கு டீசல் பெறுவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் காத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10வது இறப்பு
இந்தநிலையில் அவர் டிப்பர் பாரவூர்தியில் இறந்தநிலையில் மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து எரிபொருள் வரிசைகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை இப்போது குறைந்தபட்சம் பத்தாக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவரும் 43 மற்றும் 84 வயதுக்கு இடைப்பட்ட ஆண்களாவர்.
.இந்தநிலையில் இந்த இறப்புக்களில் பெரும்பாலானவை மாரடைப்பு காரணமாக ஏற்பட்டவை என்று கண்டறியப்பட்டுள்ளன.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
