அவுஸ்திரேலியாவில் இலங்கை விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்
சிட்னி விமான நிலையத்தில் பாதுகாப்பு உத்தரவை மீறி ஓடுபாதைக்கு அருகில் ஓடி விமானத்தில் ஏற முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிட்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கிடைத்த அழைப்பிற்கமைய, அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 30 வயதுடைய நபர், பாதுகாப்பு பகுதியினூடாக ஓடிச்சென்று தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழைந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
விமானத்தின் சரக்கு பெட்டி
இலங்கை செல்லும் விமானத்தின் சரக்கு பெட்டிக்குள் அவர் நுழைய முயன்றதாகவும், பொருட்களை கையாளுபவர்கள் தலையிட்டு சந்தேக நபரை பொலிஸ் அதிகாரிகளின் காவலில் வைத்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த நபர் மனநல பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மேலும் விமான நிலையத்தில் தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழைந்தது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் மீது வேறு எந்த குற்றமும் சுமத்தப்படவில்லை எனவும் அடுத்த 12 மாதங்களுக்கு சிட்னி சர்வதேச விமான நிலையத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam