மட்டக்களப்பில் 2 வயது குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த இளைஞன்
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 2 வயது 8 மாத பெண் குழந்தையான சித்தியின் மகளுக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்களை காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்ய 19 வயது இளைஞன் முயற்சித்துள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகம்
இந்நிலையில் குறித்த இளைஞனை எதிர்வரும் ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புதன்கிழமை (28.12.2022) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த இளைஞன் சித்தியின் வீட்டில் தங்கி வாழ்ந்துவரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சித்தியின் 2 வயது 8 மாத பெண் குழந்தையை தனது மடியில் வைத்து கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்களை காட்டி வந்துள்ளார்.
அத்துடன் அந்த குழந்தை மீது பாலியல் சேட்டை விட்டுவந்த நிலையில் அவர்களது உறவின பெண் ஒருவர் இதனை கண்டு குழந்தையின் தாயாரிடம் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவு

இதனையடுத்து குழந்தையும் தன் மீது மாமா இவ்வாறு நடந்து கொண்டதாக தாயாரிடம் தெரிவித்ததையடுத்து சகோதரியின் மகனுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட குழந்தையை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் கைது
செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில்
நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் ஜனவரி 9 ம் திகதி
வரை விளக்கமறியில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வீடு பறிபோகும் பயம் இல்லாமல் மனோஜ் செய்த காரியம், வெளுத்து வாங்கிய விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் அய்யனார் துணை வரை.. விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam