தென்னிலங்கையில் பாரிய விபத்தை தடுத்து பலரின் உயிரை காப்பாற்றிய நபர்
தென்னிலங்கையில் இன்று காலை ஏற்படவிருந்த ரயில் விபத்தை தனி நபராக தடுத்து நிறுத்திய ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நபரின் புத்திசாதுரியமான செயற்பாடு காரணமாக பாரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ரயில்வே திணைக்களத்திற்கு சொந்தமான சாகரிக்கா ரயிலில் ஏற்படவிருந்த பெரிய விபத்தையும், பல விலைமதிப்பற்ற உயிர்களையும் நபர் காப்பாற்றியுள்ளார்.
பாரிய விபத்து
பாணந்துறை ரயில் நிலையம் அருகே ரயில் பாதை உடைந்திருப்பதை அவதானித்துள்ளார்.
உடனடியாக அவர் தனது டி-ஷர்ட்டைக் கழற்றி, அதை எடுத்துக் கொண்டு, ரயிலை நிறுத்தும் நோக்கில் முன்னோக்கி ஓடியுள்ளார்.
குறித்த நபரின் செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
இந்த அனர்த்தம் காரணமாக கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.








ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 15 மணி நேரம் முன்

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
