நள்ளிரவில் வீடு புகுந்து கூரிய ஆயுதத்தை காட்டி பாரிய கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது
இரத்தினபுரி, குருவிட்ட - வெலிஹிந்த (Welihinda) பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் நள்ளிரவில் புகுந்து, நபர் ஒருவர் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த நபர், கூரிய ஆயுதத்தை காட்டி அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி இரத்தினக்கற்கள் மற்றும் தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் 35 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை இரத்தினபுரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
விளக்கமறியலில்..
கடந்த செவ்வாய்க்கிழமை (12) கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட இரத்தினக்கற்கள், தங்க நகைகள் மற்றும் ஏனைய பெறுமதியான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சந்தேகநபரை நேற்று இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இச்சம்பவம் குறித்து இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்