தேங்காய் திருடச் சென்ற இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு!
குருணாகல் (Kurunegala) - உஹுமீய பகுதியில் தேங்காய் திருடச் சென்ற இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று (12) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் குருணாகல்- வாரியபொல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே காயமடைந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, இந்த இளைஞன் உஹுமீய பிரதேசத்திலுள்ள தென்னந்தோப்பு ஒன்றிற்குள் சென்று தேங்காய் திருட முயன்றுள்ளார்.
இதன்போது தென்னந்தோப்பின் உரிமையாளர் இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞன் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
இதனையடுத்து சந்தேக நபரான தென்னந்தோப்பின் உரிமையாளர் 12 ரக போர் துப்பாக்கியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வாரியபொல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வீரம்புகெதர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |