கல்கிசையில் வீடொன்றுக்குள் நுழைந்த கும்பல் அட்டகாசம் - இருவர் சுட்டுக்கொலை
கொழும்பின் புறநகர பகுதியான கல்கிஸ்ச, வட்டரபொல பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மற்ற நபர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
சுட்டுக்கொலை
வீட்டில் இருந்த இருவரையும் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர்கள் 36 வயதுடைய நபரும் 20 வயதுடைய இளைஞன் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.