ஐரோப்பாவிலுள்ள உறவினரின் சொத்தினை வைத்து இலங்கையில் சூதாடிய நபரின் பரிதாப நிலை
இத்தாலியில் தனது உறவினர் வசித்து வரும் நிலையில், அவருக்கு சொந்தமான சொத்துக்களை விற்பனை செய்து சூதாடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் வென்னப்புவ பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நம்பிக்கையின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட சொத்துக்களை அவருக்கு தெரியாமல் பல்வேறு தரப்பினருக்கு விற்பனை செய்துள்ளதாக இத்தாலியிலுள்ள உறவினர் அறிந்துள்ளார்.
சொத்துக்களின் பெறுமதி
இது தொடர்பில் பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய உடமைகளை விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் விற்பனை செய்யப்பட்டு பொருட்களும் பல்வேறு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட சொத்துக்களின் பெறுமதி 25 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri