திருமண நிகழ்விற்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி: மர்ம முறையில் இரு மரணங்கள்..!
காலி - படபொலவில் உள்ள ஓடை ஒன்றுக்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்த இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன், கரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என அவரது தாயாரால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படபொல பகுதியில் ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அந்த இளைஞன் கடந்த 16ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
பொலிஸில் முறைப்பாடு
இருப்பினும், அவர் வீடு திரும்பாத நிலையில் அது குறித்து அவரது தாயார் பொலிஸில் முறைப்பாடு அளித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையிலே, குறித்த சடலம் மீட்கப்பட்டு அந்த தாயால் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வாதுவ கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்த மற்றொரு நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக வாதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் வாதுவ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 22 மணி நேரம் முன்

ப்ரோமோ பார்த்து ஏமாறாதீங்க.. இது கனவா? சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரோமோவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் Cineulagam
