வவுனியாவில் குளத்தில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு
வவுனியா, இராசேந்திரகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் இன்று (01.04) மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, இராசேந்திரகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட நெளுக்குளம் - நேரியகுளம் வீதியில் உள்ள தம்பனை புளியங்குளம் குளத்தில் சடலம் ஒன்று மிதப்பதாக அயலவர்கள் நெளுக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேறகொண்டுள்ளனர்.

செவ்வந்தி பதுங்கியிருப்பதாக ஹோட்டல் ஒன்றை பெரும் படையுடன் சுற்றிவளைத்த பொலிஸார் - காத்திருந்த அதிர்ச்சி
சம்பவம் தொடர்பான விசாரணை
சடலத்திற்கு அருகேயுள்ள வயல் வெளியில் சட்டை ஒன்றும் காணப்படுவதுடன், குறித்த சடலம் ஐந்து தொடக்கம் பத்து நாட்களுக்கு மேற்பட்டதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சடலம் உருகுலைந்த நிலையில் காணப்படுகின்ற நிலையில், தடவியல் பொலிஸாரின் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும், பதில் நீதவான் த.ஆர்த்தி சடலத்தை பார்வையிட்டு உடறகூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
