வாய்க்காலில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
கிளிநொச்சி - கணேசபுரம் முனியப்பர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வாய்க்காலில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அவர் பயணித்த மோட்டார்சைக்கிளும் வாய்க்காலில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணை முன்னெடுப்பு
கிளிநொச்சி - ஜெயந்தி நகரைச் சேர்ந்த சோமு கஜேந்திரமூர்த்தி (37 வயது) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் கிளிநொச்சி மாவட்ட பரந்தன் விவசாய திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றியிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதிவான் சிவபால சுப்பிரமணியம் நேரில் சென்று நிலமையை ஆராய்ந்த பின்னர் சடலம் மரண விசாரணைக்காக மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


