தமிழர் பகுதியில் விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞன்! ஐவரின் உயிரை காப்பாற்றி பெற்றோர் செய்த நெகிழ்ச்சி செயல் (video)

Sri Lanka Police World Health Organization Batticaloa Hospitals in Sri Lanka Accident
By Rusath Apr 24, 2023 09:41 PM GMT
Report

மட்டக்களப்பு - சித்தாண்டியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்த இளைஞனின் ஐந்து உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மேலும் அவரது குடும்பத்தினரும் அவயங்களைத் தானம் செய்வதில் ஆர்வம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வயல் வேலை முடித்து கிரான் பகுதியிலிருந்து சித்தாண்டியிலுள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இந்திரசேன ரேனுஜன் (வயது 29) படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

உடலுறுப்புக்கள் தானம் 


கடந்த வெள்ளிக்கிழமை (21.04.2023) இடம்பெற்ற விபத்தின் போது படுகாயடைந்த அவர், மூளைச்சாவு அடைந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்ததையடுத்து வைத்தியர்களின் ஆலோசனையுடன் அவரது உடலுறுப்புக்களை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.

தமிழர் பகுதியில் விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞன்! ஐவரின் உயிரை காப்பாற்றி பெற்றோர் செய்த நெகிழ்ச்சி செயல் (video) | Man Organ Donated For Five Life Accident

அதனடிப்படையில் மூளைச்சாவடைந்த ரேனுஜனின் சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல், இதயம் ஆகிய அவயங்கள் தேவையுடையோருக்கு பொருத்தும் வகையில் தானம் செய்யப்பட்டதாக ரேனுஜனின் சகோதரி இந்திரசேன கிரிஷாந்தினி தெரிவித்துள்ளார்.

உடல் உறுப்புக்கள் 5 பேருக்கு வாழ்வளிக்கும்

தமது சகோதரனை இழந்தது ஆறாத் துயரமாக இருந்த போதிலும் தமது சகோதரனின் உடல் உறுப்புக்கள் 5 பேருக்கு வாழ்வளிக்கும் என்பதில் தமது சகோதரன் சாகாவரம் பெற்றுள்ளதாக நினைத்து தமது குடும்பத்தினர் பெருமையடைவதாக கிரிஷாந்தினி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதுபோன்று உடலுறுப்புக்களைத் தானம் செய்ய தாமும் தமது குடும்பத்தவர்களும் சித்தமாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழர் பகுதியில் விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞன்! ஐவரின் உயிரை காப்பாற்றி பெற்றோர் செய்த நெகிழ்ச்சி செயல் (video) | Man Organ Donated For Five Life Accident 

எப்போதும் பொது நலனில் அக்கறை கொண்டுள்ள கிரிஷாந்தினி கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இரத்த தானம் செய்து வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரேனுஜனின் உடல் அதிகளவானோரின் பங்கேற்புடன் சனிக்கிழமை (22.04.2023) சித்தாண்டியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியில் விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞன்! ஐவரின் உயிரை காப்பாற்றி பெற்றோர் செய்த நெகிழ்ச்சி செயல் (video) | Man Organ Donated For Five Life Accident

குறித்த விபத்தை ஏற்படுத்திய மற்றைய மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US