ஹோட்டலில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் - பொலிஸார் தீவிர விசாரணை
மாவனெல்ல பெலிகம்மன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த 37 வயதுடைய ஒருவரின் சடலம் குளியலறையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
உயிரிழந்தவர் கும்பஒலுவ, புடலுஓயா பகுதியை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப அதிகாரி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அறையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் நிரம்பி வழிவதை கவனித்த ஹோட்டல் மேலாளர், அங்கு சென்ற போது அவர் உயிரிழந்தமை தெரிய வந்துள்ளது.
மரணத்திற்கான காரணம்
குறித்த நபர் தங்கியிருந்த அறையில் பயன்படுத்தப்பட்ட ஒரு மதுபான போத்தல், 2 இலட்சம் ரூபாய் பணம், ஒரு ஜோடி காதணிகள் மற்றும் பல வகையான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரணம் தொடர்பாக மாவனெல்ல பதில் நீதவான் விசாரணையை மேற்கொண்டார்.
மேலும் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.