ஒருவரை வாளால் வெட்டி எரியூட்டி கொலை செய்த பெண்
ஆண் ஒருவரை வாளால் வெட்டி, எரியூட்டி கொலை செய்த சம்பவம் தொடர்பாக மொனராகலை பிபிலை நாகல பிரதேசத்தில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் அதே பிரதேசத்தை சேர்ந்த 66 வயதான நபரே கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட நபர், கொலை செய்த பெண் நடத்தி வரும் வர்த்தக நிலையத்திற்கு நேற்று மாலை சென்றிருந்த போது ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேக நபரான பெண்ணும் கொலையுண்ட நபரும் சண்டையிட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதன் போது பெண், நபரை வாளால் தாக்கியுள்ளார்.
இதனையடுத்து வர்த்தக நிலையத்தில் இருந்த பெட்ரோலை நபரின் மீது ஊற்றி தீயிட்டுள்ளார். உயிரிழந்தவரின் உடல் மஹியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பிபிலை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri