7 வயது சிறுமிக்கு அயல்வீட்டு நபரினால் நேர்ந்த துயரம் - 4 மணி நேரத்தில் கண்டுபிடிப்பு
நாவலப்பிட்டி, வெஸ்ட்வேர்ல்ட் தோட்டத்தின் ரிலாகல பிரிவில் நேற்று முன்தினம் 7 வயது பாடசாலை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 35 வயதான நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரும் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவியின் வீட்டிற்கு அருகில் வசிப்பவர் எனத் தெரிய வந்தள்ளது.
குடிபோதையில் இருந்த சந்தேக நபர் நேற்று முன்தினம் மதியம் பாடசாலை மாணவியை அவரது வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் சிறுமியை அங்கேயே விட்டுச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
சிறுமி கண்டுபிடிப்பு
சிறுமி வீட்டிலிருந்து காணாமல் போனதை அறிந்ததும், உறவினர்கள் மற்றும் தோட்டத்தில் வசிப்போரினால் தேடப்பட்ட நிலையில், 4 மணித்தியாலங்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டார்.

சிறுமி சந்தேக நபரின் பெயரை வெளிப்படுத்திய பின்னர், அவரது உறவினர்கள் நாவலப்பிட்டி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவியை நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பேராதனை குழந்தைகள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri