ஜனாதிபதியின் நிகழ்வுக்கு அனுப்பப்பட்ட பேருந்துகள்-பயணிகள் அவதி
ஜனாதிபதி தலைமையில் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம் பெற்ற போதை ஒழிப்பு கூட்டத்திற்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 70 பேருந்துகளில் பொது மக்கள் பல்வேறு இடங்களில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர்.
யாழில் ஜனாதிபதியின் போதை ஒழிப்பு தேசிய வேலை திட்டத்தின் ஒரு பகுதியாக "முழு நாடுமே ஒன்றாக" என்கின்ற தேசிய செயற்பாட்டை ஆரம்பிக்கும் முகமாக 'அகன்று செல்' என்கின்ற தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் இடம்பெற்ற கூட்டத்துக்கே இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
பாரிய அசௌகரியம்
இதன் காரணமாக யாழ் மாவட்டத்தில் உள்ளூர் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மாலை நேரத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து தமது சொந்த இடங்களுக்கு செல்வோர் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.

யாழ் மாவட்டத்திலுள்ள இலங்கை போக்குவரத்து சாலைகளில் பேருந்து பற்றாக்குறைகள் இருக்கின்ற நிலையில் ஒரே தடவையில் இவ்வாறு அதிக பேருந்துகளை பொது நிகழ்வுகளுக்கு வழங்கியமை பொறுப்பற்ற செயல் என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண பொறுப்பு வாய்ந்த அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டபோது யாழ் மாவட்ட செயலரின் கோரிக்கைக்கு இணங்க பேருந்துகளை விசேட கட்டணங்களில் அடிப்படையில் வழங்கியதாக தெரிவித்தார்.
பயணிகள் பாதிப்பு
இன்றைய தினம் ஐனாதிபதியின் யாழ்ப்பாணம் நிகழ்சிக்காக பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் பயன்படுத்தப்பட்டமையால் பயணிகள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர்.

பருத்திதுறையிலிருந்து சேவையில் ஈடுபடும் அனைத்து சேவகளும் காலை 10:00 மணியுடன் நிறுத்தப்பட்டிருந்தன.
இலங்கை போக்குவரத்து சபையின் பருத்திதுறை சாலை முகாமையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதுபோது ஜனாதிபதியின் யாழ்ப்பாண நிகழ்சிக்காக தமது சாலை பேருந்துகள் பயன்படுத்தபட்டதாகவும் இதனால் காலை 10:00 மணியுடன் அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டாதாக தெரிவித்தார்.
இதனால் பயணிகள் தமது பயணங்களை மேற்கொள்ள முடியாது பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினர்.
முழுமையாக சேவை நிறுத்தம்
இதேவேளை பருத்தித்துறையிலிருந்து வடமராட்சி கிழக்கு கேவில் வரை பிற்பகல் 6:15 மணிக்கு ஈடுபடும் சேவை சில மாதங்களாக பிற்பகல் 6:45 மணிக்கு பின்னரே இடம்பெறுகிறது.
இதனால் வடமராச்சி கிழக்கு மக்கள் பிற்பகல் 12:30 மணிக்கு பின்னர் இரவு 6:45 மணிவரை காத்திருக்கின்றனர்.

தை பொங்கல் தினமான நேற்று பருத்தி துறைசாலை தனது சேவையையும் முழுமையாக நிறுத்திஇருந்தது.
குறித்த விடயங்கள் தொடர்பாக இருங்கிணைப்பு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் ஒருங்கிணைப்பு கூட்டங்களில் பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டும் அவரால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.
மேலதிக தகவல்- எரிமலை


