ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற விருந்தில் முறுகல்: ஒருவர் அடித்துக் கொலை
ஜா-எல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று இரவு இடம்பெற்ற விருந்தின் போது நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தும்பெலிய பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் தப்பியோட்டம்
குறித்த நபர் விருந்தின் போது மற்றுமொரு நபருடன் தகராறு செய்ததாகவும், அந்த நபர் அவரை தாக்கி நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவரின் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam