வெளிநாடொன்றில் திடீரென உயிரிழந்த இலங்கையர்!
தொழில் வாய்ப்புக்காக ருமேனியா நாட்டுக்குச் சென்றிருந்த கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிண்ணியாவை சேர்ந்த அனிபா பிர்தௌஸ் (46 வயது) என்பவரே நேற்று (09) இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி
கிண்ணியா, நிஜாமியா வீதியில் வசித்து வந்த இவர், மூன்று பிள்ளைகளின் தந்தை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இலங்கை போக்குவரத்துச் சபையில் (SLTB) நடத்துனராகப் பணியாற்றிய இவர், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ருமேனியா நாட்டுக்கு புலம்பெயர்ந்ததாக கூறப்படுகின்றது.
சிகிச்சை
இந்நிலையில், நேற்று இரவு இவருக்கு திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக, அங்குள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் உடல் தொடர்பான இறுதிக்கிரியைகளை ருமேனியாவிலேயே முன்னெடுப்பதற்கு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.
உயிரிழந்தவர், கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் முகம்மது அனிபா அப்துல் ஹாதி என்பவரின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.